திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 11 நவம்பர் 2022 (09:15 IST)

பொய் சொன்னாலும் பொருத்தமா சொல்லணும்... விளக்கம் கொடுக்குறேன்னு பல்ப் வாங்கிய சதீஷ்

நகைச்சுவை நடிகர் சதீஷ் கதாநாயகனாக நடிக்கும் நகைச்சுவை திரில்லர் படமான ஓ மை கோஸ்ட் என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் டிக்டாக் பிரபலம் ஜி பி முத்துவும் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் ஆடியோ வெளியீடு சமீபத்தில் நடந்த நிலையில் அதில் கலந்துகொண்ட சன்னி லியோன் புடவை கட்டி வந்திருந்தார். படத்தின் கதாநாயகி மாடர்ன் உடையில் வந்திருந்த நிலையில் நடிகர் சதீஷ் இருவரையும் ஒப்பிட்டு பேசினார். அதில் “வெளிநாட்டில் பிறந்த சன்னி லியோன், நம் கலாச்சாரப்படி புடவை கட்டி வந்துள்ளார். ஆனால் நம்ம ஊர்ல பிறந்த பெண் எப்படி வந்திருக்கார் பாருங்க” எனப் பேசி இருந்தார். அவரின் பிற்போக்குத் தனமான இந்த பேச்சு இணையத்தில் இப்போது ட்ரோல் ஆகி வருகிறது.

இந்த ட்ரோல்களுக்கு விளக்கம் அளிக்கும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டார் சதீஷ். அதில் நடிகை தர்ஷா குப்தாதான் தன்னுடைய ஆடையையும் சன்னி லியோன் ஆடையையும் ஒப்பிட்டு பேசுமாறு கூறினார் என்றும் இது நண்பர்களுக்குள் நடந்த ஜாலியான பேச்சு என்றும் கூறியிருந்தார்.

ஆனால் இந்த வீடியோவுக்கு எதிர்ப்பு தெரிவித்த தர்ஷா குப்தா “ இது நியாயமா சதீஷ். ஏன் என் மேல் பழி போடுகிறீர்கள். யாராவது தன்னை தானே அவமானப் படுத்த சொல்லி மேடையில் பேசுவார்களா?. எனக்கு அன்றைக்கு நீங்கள் பேசியபோதே வருத்தமாக இருந்தது. ஆனால் நான் அதை வெளியில் காட்டிக்கொள்ளவில்லை. ஆனால் நீங்கள் இப்போது இப்படி சொல்வது கொஞ்சம் கூட சரியில்லை” எனக் கூறியுள்ளார்.

இதையடுத்து சதீஷ் அந்த வீடியோவை டெலிட் செய்துவிட, சதீஷுக்கு வன்மையான கண்டனங்கள் எழுந்துள்ளன. மேலும் இதற்கு முன்னர் பெண்களின் ஆடை விஷயங்களில் அவர் அடித்த இதுபோன்ற கமெண்ட் வீடியோக்கள் பகிரப்பட்டு அவரைக் கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர்.