உதயநிதியின் 'கண்ணை நம்பாதே' படத்தில் இணையும் சதீஷ்

VM| Last Updated: வெள்ளி, 15 பிப்ரவரி 2019 (17:59 IST)
உதயநிதி ஹீரோவாக நடிக்க உள்ள 'கண்ணை நம்பாதே' படத்தில் பிரபல காமெடி நடிகர் சதீஷ் இணைந்துள்ளார்.


 
'கண்ணே கலைமானே' படத்தை தொடர்ந்து மாறன் இயக்கும் 'கண்ணை நம்பாதே' படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க உள்ளார்  ஆக்சன், கிரைம் திரில்லராக உருவாகும் இப்படத்தில் ஆத்மிகா உதயநிதிக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். இந்நிலையில் காமெடி நடிகர் சதீசும் உதயநிதியின் படத்தில் நடிக்க உள்ளார். 
 
இது தொடர்பாக சதீஸ்  தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார். கண்ணை நம்பாதே படத்தை இயக்க உள்ள இயக்குனர் மாறன், இதற்கு முன்னதாக இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தை இயக்கியிருந்தார்.  இப்படம் ரசிகர்களின் நல்ல  வரவேற்பு கிடைத்தது. இதையடுத்தே 'கண்ணை நம்பாதே' படம் மூலம் உதயநிதியுடன் அவர் இணைந்துள்ளார். இப்படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைக்க உள்ளார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட உள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :