செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 14 செப்டம்பர் 2023 (14:05 IST)

குற்றப் பரம்பரை தொடரில் நான் நடிக்கவில்லை… பிரபல நடிகர் பகிர்ந்த தகவல்!

இயக்குனரும் நடிகருமான சசிகுமார் குற்றப் பரம்பரையினர் சம்மந்தமான கதையை வெப் சீரிஸாக உருவாக்குவதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். இதற்கான கதையை எழுத்தாளர் வேல ராமமூர்த்தியின் நாவலில் இருந்து தழுவி உருவாக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

சசிகுமாரே அதில் நாயகனாக நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன், சத்யராஜ் மற்றும் தெலுங்கு நடிகர் ராணா என பல மொழிக் கலைஞர்கள் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த சீரிஸில் இயக்குனர் சசிகுமாரின் நெருங்கிய நண்பரான சமுத்திரக்கனி நடிக்கிறாரா என்ற கேள்வி எழுந்தது. அதற்குப் பதிலளித்துள்ள சமுத்திரக்கனி “வேறு படங்களில் பிஸியாக இருப்பதால் அந்த தொடரில் நான் நடிக்கவில்லை” என ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.