வேண்டாம் அதிமுக. திமுகவுக்கு செல்கிறார் ராதாரவி
ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுக இரண்டாக உடைந்துள்ளதால் மீண்டும் தாய்க்கட்சியான திமுகவுக்கு செல்ல நடிகர் ராதாரவி முடிவு செய்துள்ளார்.
திமுகவின் தீவிர ஆதரவாளராக இருந்த நடிகர் ராதாரவி பின்னர் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்து எம்.எல்.ஏவும் ஆனார். ஆனால் தற்போதுள்ள அதிமுகவின் அசாதாரண சூழ்நிலை காரணமாக மீண்டும் அவர் திமுகவுக்கு செல்லவுள்ளார்.
சமீபத்தில் நடந்த வாகை சந்திரசேகர் மகள் திருமணத்தில் கலந்து கொண்ட ராதாரவி இதை தெரிவித்ததோடு விரைவில் திமுக தலைவர் மற்றும் செயல் தலைவரை சந்தித்து திமுகவில் இணையவுள்ளாராம். இதை நேற்று நடந்த ஒரு படவிழாவிலும் அவர் உறுதி செய்துள்ளார்.