1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 10 அக்டோபர் 2023 (21:26 IST)

நடிகர் நாசரின் தந்தை காலமானார்

basha
தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசரின் தந்தை  காலமானார்.
 
தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் பிரபல நடிகருமான நாசர் தந்தை உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

செங்கல்பட்டு நத்தம் தட்டான்மலை தெருவை பூர்விகமாக கொண்ட  நடிகர் நாசர் திரைதுறைக்கு சென்ற பிறகு சென்னையில் தனது குடும்பத்துடன் குடியேறினார். இந்நிலையில் நாசரின் சகோதரர் மற்றும் தந்தை செங்கல்பட்டில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நாசரின் தந்தையுமான மெஹமது பாஷா (95) உடல் நலக்குறைவு காரணமாக தனது வீட்டில் உயிரிழந்தார்.
 
அவரது உடல் நாசரின் சகோதரர் ஜவகரின் வீட்டில் பொதுமக்கள் மற்றும் திரை துறையினரின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலை நாளை அடக்கம் செய்ய திட்டமிடப்பட்டும் உள்ளது. இதனிடையே நடிகர் நாசர் தனது குடும்பத்துடன் தனது தந்தையின் உடலை காண்பதற்காக வந்துள்ளார்.