1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 21 பிப்ரவரி 2024 (19:24 IST)

1000 பேருக்கு அன்னதானம் வழங்கிய நடிகர் மோகன்!

mohan
சமீபத்தில் காலமான நடிகர் விஜயகாந்தின்  நினைவிடத்திற்குச் சென்ற மோகன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். 

தமிழ் சினிமாவில் 80- களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் மோகன். மைக் மோகன் என்றும் வெள்ளி விழா நாயகன் என ரசிகர்களால் அழைக்கப்படும் மோகன், கோகில, மூடுபனி,   நெஞ்சத்தைக் கிள்ளாதே, விதி, பயணங்கள்,  நூறாவது நாள் போன்ற படங்களில் நடித்து முன்னணி நடிகராக திகழ்ந்தார்.
 
ஹரா படத்தில் சமீபத்தில் நடித்திருந்த மோகன், தற்போது விஜயுடன் இணைந்து The GOAT என்ற படத்தில் நடித்து வருகிறார்.
 
இந்த நிலையில், சமீபத்தில் காலமான நடிகர் விஜயகாந்தின்  நினைவிடத்திற்குச் சென்ற மோகன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். 
 
அதன்பின்னர், அவரது ரசிகர் மன்றம் சார்பில் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கினார்.
அப்போது அருகில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் தேமுதிக தொண்டர்களும் உடன் இருந்தனர்.