1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: திங்கள், 18 ஏப்ரல் 2022 (19:40 IST)

’தளபதி 66’ படத்தில் நடிகர் மோகனா? ஆச்சரிய தகவல்

mohan
தளபதி விஜய் நடித்து வரும் 66வது திரைப்படத்தில் மோகன் நடிக்க இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது 
 
’தளபதி 66’  திரைப்படத்தில் விஜய்யின் தந்தையாக சரத்குமார் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது
 
அதேபோல் விஜய்யின் சகோதரர்களில் ஒருவராக பிரகாஷ்ராஜ் நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் இன்னொரு சகோதரராக மோகன் நடிக்க இருப்பதாகவும் இது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது 
 
நடிகர் மோகன் கடந்த 90 களில் பல வெள்ளிவிழா படங்களை கொடுத்த நிலையில் தற்போது அவர் ‘ஹரா’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது