செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 26 செப்டம்பர் 2023 (07:29 IST)

“அப்பா அப்படி பேசியதால்தான் இறந்தாரா?”... மாரிமுத்துவின் மகன் கணீர் பதில்!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் என்ற சீரியலில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரம் மூலமாக மிகப்பெரிய அளவில் பாராட்டுகளைக் குவித்த நடித்த நடிகர் ஜி மாரிமுத்து எதிர்பாராத வகையில் கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலாமானார்.

அவரின் இறுதிச்சடங்குகள் சென்னையிலும் அவரின் சொந்த ஊரான தேனியிலும் நடந்தன. இந்நிலையில் மாரிமுத்துவின் இரங்கல் கூட்டம் ஒன்று பிரபல யுட்யூப் சேனலால் நடத்தப்பட்டது. அதில் மாரிமுத்துவின் மனைவி, மகன் மற்றும் மகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய மாரிமுத்துவின் மகன் அகிலன் “அப்பா ஒரு நிகழ்ச்சியில் சாமி இல்லை என்று பேசியதால்தான் இறந்துவிட்டதாக பலரும் பேசுவதைக் கேட்கும் போது எனக்கு முட்டாள்தனத்தின் உச்சமாகதான் தெரிகிறது. அப்பா பேசியது அத்தனையும் உண்மை.  அதை நான் எக்காரணம் கொண்டும் திரும்ப பெறமாட்டேன். அது சம்மந்தமாக விவாதம் வைத்தாலும் நான் செல்வதற்கு தயாராக இருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.