திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: செவ்வாய், 19 செப்டம்பர் 2023 (14:08 IST)

ஜி மாரிமுத்துவுக்கு பதில் யாரும் இல்லை.. எதிர்நீச்சல் சீரியலில் திடீர் திருப்பம்..!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் கேரக்டரில் நடிகர் ஜி மாரிமுத்து நடித்து வந்த நிலையில் திடீரென அவர் மாரடைப்பு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் காலமானார்.
 
இந்த நிலையில் அவரது கேரக்டரில் நடிப்பதற்கு சில நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது.. குறிப்பாக வேல ராமமூர்த்தி, இளவரசு உள்ளிட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 
 
ஆனால் தற்போது வந்துள்ள தகவலின் படி எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குலசேகுணசேகரன் கரன் கேரக்டர் லெட்டர் எழுதி வைத்துவிட்டு கண்காணாத இடத்திற்கு சென்று விட்டதாக கதை மாற்றப்பட்டுள்ளது  
 
என் மனைவி எனக்கு எதிராக பேசுகிறார், என்னுடைய குழந்தைகளும் என்னுடைய சொல் பேச்சை கேட்க மாட்டேங்கிறார்கள், என் அம்மாவும் நான் சொல்வதை கேட்பதில்லை. எனவே நான் மனம் வெறுத்து போய் இந்த வீட்டை விட்டு போகிறேன் என லெட்டர் எழுதி வைத்துவிட்டு அவர் சென்று விட்டதாகவும் அதை அந்த லெட்டரை பார்த்து அந்த வீட்டில் உள்ளவர்கள் அழுவது போன்றும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. 
 
எனவே இன்னும் சில மாதங்களுக்கு அல்லது வருடங்களுக்கு அவர் கண்காணாத இடத்தில் இருப்பது போலவே கதை செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
Edited by Siva