1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. Actor mamooty talked about brammayugam movie

பிரம்மயுகம் படத்தில் ஹீரோவும் இல்லை… வில்லனும் இல்லை – மம்மூட்டி !

மம்மூட்டி
கடந்த சில ஆண்டுகளாக வித்தியாசமான கதைக்களன்களை தேடி நடித்து வருகிறார் மம்மூட்டி. அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான புழு, கண்ணூர் ஸ்குவாட் மற்றும் காதல் ஆகிய திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பாராட்டுகளைப் பெற்றன.

இந்நிலையில் இப்போது அவர் நைட் வாட்ச் புரொடக்‌ஷன் சார்பில் சசிகாந்த் தயாரிக்கும் பிரம்மயுகம் என்ற படத்தில் நடித்து வருகிறார். பேய் திரில்லர் வகைப் படமாக இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை பூதகாலம் படத்தை இயக்கிய ராகுல் சதாசிவன் இயக்கியுள்ளார்.

நாளை வெளியாக உள்ள இந்த படம் முழுக்க முழுக்க கருப்பு வெள்ளையில் ரிலீஸாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. த்ரில்லர் படமாக உருவாகியுள்ள பிரம்மயுகம் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை இந்த அறிவிப்பு எகிறவைத்துள்ளது. இந்நிலையில் ப்ரமோஷனில் கலந்துகொண்ட மம்மூட்டி படம் பற்றி பேசியுள்ளார்.

அதில் “இந்த படத்தில் ஹீரோக்களோ வில்லன்களோ இல்லை. முழுக்க முழுக்க கதாபாத்திரங்கள்தான் உள்ளன.  என்னுடைய கதாபாத்திரம் மர்மமான பல அடுக்குகளைக் கொண்ட கதாபாத்திரமாக உருவாக்கப்பட்டுள்ளது. கதாபாத்திரம் பற்றி நிறைய சொல்ல விரும்பவில்லை. அது ரசிகர்களின் திரையனுபவத்தைப் பாதிக்கும்” எனக் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
ஜெயம் ரவி நடிக்கும் சைரன் படத்தின் சென்சார் தகவல்!