ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: திங்கள், 27 மார்ச் 2017 (23:06 IST)

இது ஒரு மோசமான முன்னுதாரணம். ரஜினி இலங்கை பயணம் ரத்து குறித்து நடிகர் மாதவன்

சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் இலங்கை பயணம், மற்றும் இலங்கை பயணம் ரத்து ஆகிய இரண்டுமே டிரெண்ட் ஆனது.



 


ரஜினியின் இலங்கை பயணம் ரத்து குறித்து அரசியல்வாதிகளும், சமூக வலைத்தள பயனாளிகளும் திரையுலகினர்களும் பல்வேறு கருத்துக்களை கூறி வருகின்றனர் அந்த வகையில் தற்போது நடிகர் மாதவன் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: 'எப்போதும் இது போன்ற சர்ச்சைகளினால் நடிகர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். எங்களுடைய படங்கள் ரிலீஸாகும் முன்னால், சில சமூக பிரச்சனைகளுடன் எங்களுடன் தொடர்புபடுத்தி பேசுவது மிக மோசமான முன்னுதாரணம்.” என நடிகர் மாதவன் கருத்து தெரிவித்துள்ளார்.