செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : புதன், 15 ஏப்ரல் 2020 (15:00 IST)

தமிழக அரசு கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டும் – டிடிவி தினகரன் அறிக்கை !

தமிகத்தில் கொரொனா தொற்று அதிகரித்து வந்த நிலையில், நேற்றைய நிலவரப்படி 31 பேருக்கு மட்டும்தான் கொரோனா தொற்று ஏற்பட்டதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்,  தமிழகத்தில் கொரோனா தொற்றால் குழந்தைகள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்,அதனால் பரிசோதனை மையங்களையும்,   சோதனை எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்கான நடவடிக்கையை அரசு முழுவீச்சில் மேற்கொள்ள  அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கொரோவால் பாதிக்கப்பட்ட 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை உயர்ந்திருப்பதும், எந்த வித அறிகுறியும் இல்லாமல்  கொரொனாவால்  பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது கவலை அளிக்கிறது.

மேலும்,கொரோனாவால் அதிகம்  பாதிக்கப்பட்ட  இந்திய மாநிலங்களில் நேற்றைய நிலவரப்படி (1204 பேர் ) தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது. தமிழக அரசு ஏனோதானோவென்று நடந்துகொள்ளாமல் நோயைக் கட்டுக்குள் கொண்டுவர  கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.