திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 9 ஜனவரி 2023 (09:31 IST)

கே ஜி எஃப் மாதிரி படங்கள் எனக்குப் பிடிக்காது…. நடிகர் கிஷோர் அதிரடி கருத்து!

நடிகர் கிஷோர் தென்னிந்திய மொழி படங்களில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார்.

யாஷ் நடித்து பிரசாத் நீல் இயக்கத்தில் வெளியான படம் கேஜிஎஃப் மற்றும் கேஜிஎஃப் சாப்டர் 2. சமீபத்தில் வெளியான கேஜிஎஃப் 2 மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இரண்டாம் பாகம் இந்தியா முழுவதும் 1000 கோடி ரூபாய்க்கும் மேல் திரையரங்கு மூலமாக வசூலித்து சென்ற ஆண்டின் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

இந்நிலையில் கன்னடம் மற்றும் தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் கிஷோர் “எனக்கு கேஜிஎப் போன்ற படங்கள் பிடிக்காது. நான் இன்னும் இரண்டாம் பாகத்தைப் பார்க்கவில்லை” எனக் கூறியுள்ளார். மேலும் “இதுபோன்ற படங்களுக்கு பதிலாக நல்ல கதையம்சம் உள்ள படங்களை ஆதரிக்கலாம். இது என்னுடைய தனிப்பட்ட முடிவு. இது சரியா தவறா என்று எனக்கு சொல்ல தெரியவில்லை” எனக் கூறியுள்ளார். இது கன்னட திரையுலகில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.