மூச்சுத் திணறலால் அவதிப்படும் நடிகர் கார்த்திக்… தீவிர கண்காணிப்பில் மருத்துவர்கள்!
நடிகர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் இப்போது அவருக்கு மூச்சுத் திணறல் அதிகமாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பாஜக வேட்பாளரும் நடிகையுமான குஷ்புவை ஆதரித்து ஆயிரம் விளக்குத் தொகுதியில் மக்களிடம் வாக்குகள் சேகரித்தார் நடிகர் கார்த்திக். பிறகு திடீரென்று அவருக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின் வீட்டிற்குச் சென்று தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்தார். ஆனால் மீண்டும் அவருக்கு உடல்நிலை நலிவடையவே அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் இப்போது அவருக்கு மூச்சுத்திணறல் அதிகமாகியுள்ளதாகவும் மருத்துவர்களின் தீவிரக் கண்காணிப்பில் அவர் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.