செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 27 டிசம்பர் 2017 (12:32 IST)

ரசிகர் இறந்ததால் துக்கம் தாங்காமல் கதறி அழுத நடிகர் கார்த்தி

விபத்தில் உயிரிழந்த தனது ரசிகரின் உடலை நேரில் கண்ட நடிகர் கார்த்தி, துக்கம் தாங்காமல் கதறி அழுதார். 
நடிகர் சிவக்குமாரின் இளைய மகனான கார்த்தி, திரையுலகிற்கு பருத்திவீரன் படம் மூலம் அறிமுகமாகி பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். கார்த்தி ஒரு நல்ல நடிகரைத் தாண்டி, அவர் பல உதவிகளை மக்களுக்கு செய்துவருகிறார். சமீபத்தில் ராஜஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்ட மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் உடலிற்கு, கார்த்தி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
 
இந்நிலையில் அவரது ரசிகர் ஒருவர் சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். ரசிகரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட கார்த்தி, ஒரு கட்டத்தில் கண்ணிரை அடக்க முடியாமல் அழுதுவிட்டார். அவரது ரசிகருக்கு திருமணமாகி மூன்று மாதங்களே ஆகியுள்ளது.