செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வியாழன், 2 நவம்பர் 2023 (07:58 IST)

நடிகர் ஜூனியர் பாலையா காலமானார்: திரையுலகினர் இரங்கல்..!

இன்று அதிகாலை மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில் வளசரவாக்கம் இல்லத்தில் உயிர் பிரிந்தது என அவருடைய குடும்பத்தினர் தெரிவித்தனர். மறைந்த மூத்த நடிகர் டி.எஸ்.பாலையாவின் மகன் ஜூனியர் பாலையா என்பது குறிப்பிடத்தக்கது.

 கடந்த 1975 ஆம் ஆண்டு மேல்நாட்டு மருமகள் என்ற திரைப்படத்தில் நடிகராக ஜூனியர் பாலையா அறிமுகமானார். அதன் பிறகு அவர் சிவாஜி, கமல், ரஜினி உட்பட பல பிரபலங்களுடன் இணைந்து நடித்தார் என்பதும்  கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெளியான ’என்னங்க சார் உங்க சட்டம்’ என்ற படத்தில் தான் அவர் கடைசியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

கோபுர வாசலிலே, சுந்தரகாண்டம், வின்னர், கும்கி, சாட்டை,  புலி,  நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்துள்ளார். மேலும் முகிலன் என்ற வெப் தொடரில் நடித்துள்ளார் என்பதும் சித்தி உள்பட ஒரு சீரியல்களிலும் ஜூனியர் பாலையா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் ஜூனியர் பாலையா மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்


Edited by Siva