வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வியாழன், 5 அக்டோபர் 2023 (10:40 IST)

பிரபல தமிழ் நடிகை - இயக்குனர் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகையும் இயக்குனருமான ஜெயதேவி நேற்று சென்னையில் தனது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 65.

நடிகை, இயக்குனர் ஜெயதேவி தனது 20 வயதில் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அவர் இதயமலர், சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு என சுமார் 20  படங்களுக்கு மேல் நடித்துள்ளார். அதேபோல் நலம் நலமறிய ஆவல், விலாங்கு மீன், விலங்கு, பாசம் ஒரு வேஷம், பவர் ஆஃப் வுமன் உட்பட 15 திரைப்படங்களை இயக்கி உள்ளார். ஒரு சில படங்களை தயாரித்தும் உள்ளார்.

இவர் ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான வேலு பிரபாகரனை காதலித்து திருமணம் செய்துகொண்டார் என்பதும் ஆனால் சில ஆண்டுகளில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டதாகவும் கூறப்பட்டது.

நடிகை - இயக்குனர் ஜெயதேவி கடந்த சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று காலை காலமானார். ஜெயதேவியின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Edited by Mahendran