திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 8 செப்டம்பர் 2020 (09:59 IST)

பிரபல காமெடி நடிகர் ஜெய பிரகாஷ் ரெட்டி திடீர் மரணம்!

பிரபல தெலுங்கு நடிகர் ஜெய பிரகாஷ் ரெட்டி மாரடைப்பால் மரணம்

கொரோனா காலத்தில் தொடர்ந்து திரைப்பிரபலங்கள் அடுத்தடுத்து மரணத்தை தழுவி வருகின்றனர். அந்தவகையில் ரிஷி கபூர், இர்பான் கான் , சுஷாந்த் சிங், சிரஞ்சீவி சர்ஜா , சேது என அடுத்தடுத்து நடிகர்களின் மரணம் ஏற்றுக்கொள்ளமுடியாத துக்கத்தை கொடுத்து வருகிறது.

இந்நிலையில் தற்ப்போது ஆறு, உத்தமபுத்திரன் போன்ற படங்களில் முக்கிய வேடம் ஏற்று நடித்த நடிகர் ஜெயபிரகாஷ் ரெட்டி இன்று (8.9.2020) அதிகாலை மாரடைப்பால் திடீரென மரணித்துள்ளார். 74 வயதாகும் இவர் பல்வேறு தெலுங்கு படங்களில் காமெடி நடிகராகவும், குணச்சித்ர நடிகராகவும் நடித்து புகழ்பெறுள்ளார். நடிகரின் மரண செய்தியை அறிந்த டோலிவுட் பிரபலங்கள் அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர்.