1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 29 செப்டம்பர் 2023 (08:00 IST)

“நான் ஒரு நாள் கூட அமெரிக்காவுக்கு போனதில்லை…” – நடிகர் ஜனகராஜ் !

இயக்குனர் பாரதிராஜாவால் திரையுலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் ஜனகராஜ். நகைச்சுவை, குணச்சித்திரம் மற்றும் வில்லன் வேடங்களில் நடித்த அவர் ஒரு கட்டத்தில் அதிகமாக சினிமாவில் நடிக்காமல் காணாமல் போனார்.

அதன் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் 96 மற்றும் தாதா 87 ஆகிய படங்களில் நடித்தார். அதன் பின்னரும் அவர் மீண்டும் படங்களில் நடிக்கவில்லை. இதனால் அவர் அமெரிக்காவுக்கு சென்று தன்னுடைய மகனோடு செட்டில் ஆகிவிட்டதாக சொல்லப்பட்டது.

ஆனால் அதை மறுத்துள்ளார் ஜனகராஜ். சமீபத்தில் அவர் அளித்த ஒரு நேர்காணலில் “நான் இதுவரை அமெரிக்காவுக்கே சென்றதில்லை. வெண்டுமானால் என் பாஸ்போர்ட்டை காட்டுகிறேன். 96 படத்துக்குப் பிறகு நல்ல கதாபாத்திரங்கள் வரவில்லை. அதற்க்ளுள் கொரோனா வந்துவிட்டது” எனக் கூறியுள்ளார்.