1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 21 ஜனவரி 2023 (09:24 IST)

அஹா கவுண்டமணி படைத்த சூப்பர் சாதனை… தமிழ் சினிமாவில் இதுக்கு முன்ன நடந்திருக்கா?

கவுண்டமணி கதாநாயகனாக நடிக்கும் பழனிச்சாமி வாத்தியார் என்ற படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது.

கவுண்டமணி கடைசியாக நடித்த திரைப்படம் எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை திரைப்படம். இந்நிலையில் இப்போது 6 ஆண்டுகளுக்குப் பிறகு கவுண்டமணி ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பழனிச்சாமி வாத்தியார் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படும், இந்தப் படத்தை செல்வ அன்பரசன் என்பவர் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படம் நேற்று பூஜையோடு தொடங்கியது.

தற்போது 83 வயதாகும் கவுண்டமணி இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். தமிழ் சினிமாவில் அதிக வயதில் கதாநாயகனாக நடித்த நடிகர் என்ற சாதனையை கவுண்டமணி படைத்துள்ளார். இதற்கு முன்னர் இதுபோன்ற ஒரு சாதனை தமிழ் சினிமாவில் நடந்திருக்குமா என்பது கேள்விக்குறிதான்.

தமிழ் சினிமாவில் 16 வயதினேலே படம் ரஜினி, கமல் மற்றும் பாரதிராஜா பல ஜாம்பவான்களை உருவாக்கியது போலவே கவுண்டமணி என்னும் நகைச்சுவை ஜாம்பவானையும் உருவாக்கியது. அதன் பின்னர் தனது உடல் மொழியாலும், கவுண்ட்டர் வசனங்களாலும் தமிழ் திரையுலகை ஆளுகை செய்ய ஆரம்பித்தார் கவுண்டமணி. 40 வயதுக்கு பின்னரே வாய்ப்புக் கிடைத்து அதன் பின்னர் அதன் மூலம் உச்சாணிக் கொம்புக்கு சென்றதில் எம் ஜி ஆருக்கும் கவுண்டமணிக்கும் மிகப்பெரிய ஒற்றுமை உண்டு.