என் பேரன் முகத்தை கூட பார்க்க முடியல.... சாருஹாசன் வருத்தம்!
லண்டனில் இருந்து சென்னை திரும்பிய பிரபல இயக்குனர் மணிரத்தினம் மகன் நந்தன் வீட்டிற்குள்ளேயே தனி அறையில் தனிமை படுத்தப்பட்டார். அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்றாலும் அவருடைய பாதுகாப்பு மற்றும் மற்றவர்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அவரது அம்மா சுஹாசினி மணிரத்தினம் இதனை செய்து வீடியோ எடுத்து வெளியிட்டு விழிப்புணர் ஏற்படுத்தியிருந்தார்.
இந்த காரியத்தை பலரும் பாராட்டி வந்தனர். இந்நிலையில் தற்போது தனது பேரன் தனிமைப்படுத்தப்பட்டதை குறித்தது பேசியுள்ள சுஹாசினியின் தந்தை சாருஹாசன், " என் பேரன் நந்தன் லண்டனில் இருந்து வந்த உடன் தாத்தா என்று என்னை தான் முதலில் பார்க்க வருவான். இப்போது அவன் இங்கு வந்து 10 நாட்களாகியும் என்னால் அவனை பார்க்க முடியவில்லை.
இது மிகுந்த வருத்தத்தை எனக்கு கொடுத்தாலும் கொரோனாவை விரட்டி அடிக்க வேண்டிய நேரத்தில் இப்படி இருப்பது தான் சரி என கூறியுள்ளார்.