ஹீரோவாகும் நகைச்சுவை நடிகரின் மகன் – அறிவிப்பை வெளியிட்டு மகிழ்ச்சி!

Last Modified திங்கள், 4 ஜனவரி 2021 (11:31 IST)

நகைச்சுவை நடிகரான சாம்ஸ் தனது மகன் யோகன் கதாநாயகனாக அறிமுகவாகவுள்ள செய்தியை வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

நாடகங்களில் நடித்ததன் மூலம் கிடைத்த பிரபலத்தைக் கொண்டு தமிழ் சினிமாவுக்குள் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர் சாம்ஸ். இயக்குனர் ராதாமோகன் இயக்கிய எல்லா படங்களிலும் நடித்து பிரபலமானார். இப்போதும் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவரின் மகன் யோகன் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளதை தனது சமூகவலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

அதில் ‘வணக்கம், ஒரு இனிப்பான செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். எனது மகன் "யோஹன்" ( YOHAN )
கூத்துப்பட்டறையில் நடிப்பு பயிற்சியும் , BOFTA'வில் இயக்குனர் பயிற்சியையும் வெற்றிகரமாக முடித்துவிட்டார்.
தற்பொழுது இயக்குனர் திரு ராம் அவர்களிடம் அசிஸ்டன்ட் டைரக்டராக பணியாற்றி வரும் யோஹன் நடிகனாக களமிறங்க தயாராகிவிட்டார். அவருக்கு உங்களது ஆசிகளையும் ஆதரவையும் வழங்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.அன்பும்... நன்றியும்
சாம்ஸ்’ எனத் தெரிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :