செவ்வாய், 14 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 25 ஜூலை 2017 (21:48 IST)

கமலுக்கு ஒரு பிரச்சனை என்றால் ஒட்டுமொத்த நடிகர் சங்கமும் நிற்கும். விஷால்

தென்னிந்திய திரைப்பட சங்கத்தின் சார்பில் கட்டப்பட்டு வரும் கட்டிடத்திற்கான இடைக்கால தடையை இன்று சென்னை ஐகோர்ட் நீக்கியது. இதனையடுத்து நாளை முதல் மீண்டும் கட்டிடப் பணிகள் தொடங்கும் என்று விஷால் இன்று பத்திரிகையாளர்கள் இடையே கூறினார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:



 
 
டிகர் சங்கக் கட்டடப் பணிகள் நாளை முதல் தொடங்கவுள்ளது. வருகிற 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் நடிகர் சங்கக் கட்டடம் கட்டும் பணிகள் முடிக்கப்படும். முன்னர் கூறியது போலவே நடிகர் சங்கக் கட்டடப் பணிகள் நிறைவடைந்ததும் திருமணம் செய்து கொள்வேன். சிறப்பான திட்ட அமைப்புடன் உருவாகும் நடிகர் சங்கக் கட்டடம், நாடகம், விழாக்கள், விருது வழங்கும் நிகழ்வுகள் எனப் பல நிகழ்ச்சிகளும் நடைபெறும் வகையில் பெரிய அரங்கத்துடன் அமைக்கப்பட உள்ளது. மொத்தம் நான்கு தளங்கள் கொண்ட சிறப்பானதொரு கட்டட அம்சத்துடன் நடிகர் சங்கம் அமையும். தற்போது கேளிக்கை வரி தொடர்பாக நடந்து வரும் பிரச்னையில் திரைப்படத்துறைக்குச் சரியான நீதி கிடைக்கும் என்றே நம்புகிறோம். 
 
சமீப காலத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு எதிராக சில பிரச்னைகள் எழுந்த வண்ணம் உள்ளன. கமலுக்கு ஒரு பிரச்னை என்றால், அவர் மீது வழக்கு தொடரப்பட்டால், அவர் பின்னால் நான் நிற்பேன். ஒட்டுமொத்த நடிகர் சங்கமும் அவருக்கு உறுதுணையாக நிற்கும்’