1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : வெள்ளி, 24 ஆகஸ்ட் 2018 (16:42 IST)

ஜெயலலிதா கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பது கடினமான விஷயம்!

பிரபல தனியார் ஜவுளி நிறுவனம் விளம்பர தூதராக நடிகை கீர்த்தி சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான அறிமுக விழாவில் கலந்துகொண்ட நடிகை கீர்த்தி  சுரேஷ் பேசும்போது, "கேரளாவில் தற்போது சூழ்நிலை மிகவும் கடினமாக உள்ளது. முகாம்களில் உள்ளவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் கிடைக்கின்றன.
கடுமையான வெள்ளம் பாதித்த மலைவாழ் மக்கள் மற்றும் வீடுகளில் வெளியேற முடியாமல் தங்கியுள்ளோர்களுக்கு நிவாரணப் பொருட்கள் கிடைக்கப் பெறவில்லை. அதற்கு வழிவகை செய்யப்பட வேண்டும். நானும் எனது நண்பர்களும் தொடர்ந்து உதவி செய்ய அரிசி உள்ளிட்ட பொருட்களுடன் கேரளா  செல்லவுள்ளோம். இங்கிருந்து நிவாரணப் பொருட்கள் வழங்க நினைப்பவர்கள் உணவு பொருட்கள் மற்றும் பாத்திரங்களாக கூட அனுப்பி வைக்கலாம்” என்றார். 
 
மேலும் “ஜெயலலிதா அவர்களின் வரலாற்று படத்தை தயாரிப்பது மட்டுமில்லாமல் அந்தக் கதாப்பாத்திரத்தை ஏற்று நடிப்பது என்பது கடினமான மற்றும்  சவலான விஷயம்”என்றார்.