வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 18 நவம்பர் 2020 (17:08 IST)

’’சிங்கப் பெண்’’…. ஆசிட் வீச்சால் பாதித்த பெண்…விளம்பர மாடல்

ஈரான் நாட்டைச் சேர்ந்த மசோமி அடீ (Masoumeh Ataei) என்ற பெண் மீது 10 ஆண்டுகளுக்கு முன் ஆசிட் வீச்சு சம்பவம் நடைபெற்றது. இதில் அவரது முகம் உருக்குலைந்தது.

இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட, அப்பெண்ணுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

சுமார் 38 -க்கும் மேற்பட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்ட நிலையில் தற்போது அவரது முகம் மாறியுள்ளது. இந்நிலையில் அவர் மற்றவர்களுக்கும் உந்து சக்தியாகவும் முன்மாதிரி யாகவும் இருக்கும் வகையில் விளம்பரப் படங்களில் நடித்துள்ளார்..

அவருக்குப் பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.