ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 10 அக்டோபர் 2020 (11:01 IST)

அக்ஷரா ஹாசனின் "அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு " ட்ரைலர் தேதி ரிலீஸ்!

பிரபல பின்னணி பாடகி உஷா உதுப் பாட்டியாகவும், கமல்ஹாசனின் மகள் அக்சராஹாசன் பேத்தியாகவும் நடித்து வரும் படம் "அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு". இந்த படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. அண்மையில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

அதையடுத்து சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. ’டிரண்ட் லவுட்’ என்ற நிறுவனம் தயாரிக்கும் முதல் படமான இந்த படத்தில் அக்சரா ஹாசன் விஜி எனும் ரோலில் ஆக்சன் நாயகியாக நடிக்கின்றார். ராஜாகிருஷ்ணமூர்த்தி என்பவர் இயக்கியுள்ள இப்படத்தில் மால்குடி சுபா, அஞ்சனா ஜெயப்பிரகாஷ், ஷாலினி விஜயகுமார், சுரேஷ் மேனன், ஜார்ஜ் மரியான் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் தற்ப்போது இப்படத்தின் சுவாரஸ்ய தகவல் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதாவது,  படத்தின் ட்ரைலரை வரும் அக்டோபர் 12-ம் தேதி மாலை 5 மணிக்கு உலகநாயகன் கமல் ஹாசன் வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.