திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: திங்கள், 26 ஜூலை 2021 (10:32 IST)

பழம்பெரும் நடிகை ஜெயந்தி காலாமானார்!

தமிழில் பல படங்களில் நடித்துள்ள நடிகை ஜெயந்தி காலமாகியுள்ளார்.

பாமா விஜயம்  உட்பட ஏராளமான தமிழ்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை ஜெயந்தி. தமிழ் மட்டும் இல்லாமல் தென்னிந்திய மொழிகளில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர் சில ஆண்டுகளாக உடல் நலப் பிரச்சனைகள் காரணமாக சொந்த மாநிலமான கர்நாடகாவில் ஓய்வெடுத்து வந்தார்.

ஆஸ்துமா பிரச்சனையில் அவதிப்பட்ட அவர் இன்று அவர் இயற்கை எய்தியுள்ளார்.