1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 6 மே 2021 (09:52 IST)

அபூர்வ சகோதரர்கள் பட குள்ள மனுஷன் காலமானார்...!

கடந்த ஆண்டு முதல் இந்த ஆண்டு வரை திரைத்துறையில் பல திறமை வாய்ந்த நடிகர்கள் கலாமாகிவிட்டனர். தொடர்ந்து அடுத்தடுத்து பிரபலங்களின் மரணத்தால் சினிமாத்துறை நல்ல நல்ல கலைஞர்களை இழந்து வருகிறது.
 
தமிழில் பாடகர் எஸ்.பிபி, நடிகர் விவேக், இயக்குனர் கே.வி ஆனந்த் , காமெடி நடிகர் பாண்டு என மரணிப்பவர்களின் லிஸ்ட் நீண்டுக்கொண்டே போகிறது. இந்நிலையில் தற்போது 1989 ஆம் ஆண்டு கமல் நடிப்பில் வெளியான ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் அப்பு கமலின் நண்பராக நடித்த நடிகர் மேலா ரகு காலமானார். 
 
60 வயதான இவர் கடந்த ஏப்ரல் 18ம் தேதி தனது வீட்டில் திடீரென அவர் மயங்கி விழுந்தார். அதன் பிறகு கொச்சியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். சிகிட்சை பலனளிக்காமல் இன்று அவர் உயிழந்துள்ளார். இவர் கடைசியாக மோகன் லால் நடிப்பில் வெளியான திரிஷ்யம் 2 படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.