அன்னலட்சுமியா இது… மாடர்ன் உடையில் மாஸ் காட்டிய அபிராமி!

Last Modified புதன், 5 மே 2021 (10:39 IST)

நடிகை அபிராமியின் ஸ்டைலான புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி பரவி வருகிறது.

தமிழில் 2000களின் தொடக்கத்தில் பிஸியாக இருந்த நடிகை அபிராமி. அதையடுத்து அவரை தனது விருமாண்டி படத்தில் ஒப்பந்தம் செய்தார் கமல்ஹாசன். அந்த படத்தில் கமலோடு அவர் மிகவும் நெருக்கமாக நடித்திருந்தார். அந்த படம் பரவலான பாராட்டுகளைப் பெற்றாலும், அதன் பின்னர் அவர் சினிமாவில் இருந்து காணாமல் போனார். அதன் பின்னர் பல வருடங்கள் கழித்து அவர் ஜோதிகா நடித்த 36 வயதினிலே படத்தில் நடித்தார்.

இப்போது அவர் மீண்டும் நடிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். அந்த நிகழ்ச்சியில் மாடர்ன் உடையில் அவர் இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :