சிம்புவின் பாகுபலி ஐடியா: ஒகே சொன்ன ஆதிக்!!


Sugapriya Prakash| Last Modified வியாழன், 27 ஏப்ரல் 2017 (11:02 IST)
சிம்பு தற்போது ஆதிக் இயக்கத்தில் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிம்பு மூன்று வேடங்களில் நடிக்கிறார்.

 
 
இந்நிலையில் இயக்குனர் ஆதிக், படத்தை பற்றி ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். அதாவது AAA படம் 2 பாகங்களாக வெளிவரும் என்று அறிவித்தார்.
 
இந்த அறிவிப்பிறகு சிம்பு தான் ஐடியா கொடுத்தார் எனவும் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பிற்கான முக்கிய காரணம் இப்படத்தில் வரும் மதுரை மைகேல் மற்றும் அஸ்வின் தாத்தா கதாபாத்திரங்களின் காட்சிகள் மட்டுமே 2 மணி நேரம் 40 நிமிடம் செல்வதால் இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.
 
இரண்டு பாகங்களும் அடுத்தடுத்து வெளியாகுமா இல்லை சில கால இடைவேளைக்கு பின் வெளியாகுமா என்பது தெரியவில்லை.
 
பாகுபலி படமும் இவ்வாறு இரணடு பாகங்களாக உருவாகி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் AAA படக்குழுவினரும் இந்த ஐடியாவை பின்பற்ற உள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :