லால் சிங் சட்டா படத்தை டாம் ஹாங்ஸுக்கு திரையிடும் அமீர்கான்!
நடிகர் அமீர்கான் இப்போது ஹாலிவுட் படமான பாரஸ்ட் கம்ப் படத்தை ரீமேக் செய்து நடித்து முடித்துள்ளார்.
1994 ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான பாரஸ்ட் கம்ப் படம் ஆஸ்கர்களை அள்ளியது. அதுமட்டுமில்லாமல் இன்று வரை உலக சினிமா ரசிகர்களின் விருப்பப் பட்டியலில் இடம்பெற்றுள்ள படமாக உள்ளது. இந்த படத்திஅ 25 ஆண்டுகள் கழித்து பாலிவுட் நடிகர் அமீர்கான் லால் சிங் சட்டா எனும் பெயரில் ரீமேக் செய்துள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து இப்போது பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. ஏப்ரல் மாதம் இந்த படம் வெளியாக உள்ள நிலையில் இப்போது இந்த படத்தை பாரஸ்ட் கம்ப் படத்தின் நாயகன் டாம் ஹாங்ஸுக்கு திரையிட்டு காட்ட முடிவு செய்துள்ளார் அமீர்கான். படத்தின் வெளியீட்டின் போது அமெரிக்காவில் இந்த சிறப்புத் திரையிடல் இருக்கும் என சொல்லப்படுகிறது.