1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 10 டிசம்பர் 2022 (08:08 IST)

அலுவலகத்தில் இந்துமுறைப் படி பூஜை செய்த அமீர்கான்

சமீபத்தில் அமீர்கான் நடிப்பில் லால் சிங் சத்தா என்ற திரைப்படம் வெளியாகி படுதோல்வி அடைந்தது. படம் சுமாராக இருந்தாலும், பாலிவுட்டில் அந்த படத்துக்கு எதிராக பரப்பப் பட்ட வெறுப்புப் பிரச்சாரமும் தோல்விக்குக் காரணமாக அமைந்தது.

இந்நிலையில் அடுத்து சாம்பியன்ஸ் என்ற படத்தில் நடிக்க அமீர்கான் ஒப்பந்தம் ஆகி இருந்தார். ஆனால் இப்போது அவர் அந்த படத்தில் நடிக்கவில்லையாம். மேலும் அவர் நடிப்பில் இருந்து இடைவெளி எடுத்துக் கொண்டு குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிட விரும்புவதாகக் கூறியுள்ளார். இதுபற்றி கூறிய அவர் “நான் தொடர்ந்து 35 ஆண்டுகளாக சினிமாவில் இருக்கிறேன். எனது அம்மா மற்றும் மகளுடன் நான் நேரம் செலவிடவே இல்லை. அதனால் இப்போது ஒரு சிறிய பிரேக் எடுத்துக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் இப்போது தன்னுடைய முன்னாள் மனைவி கிரண் ராவ்வுடன் இணைந்து அவரின் தயாரிப்பு நிறுவன அலுவலகத்தில் அமீர்கான் இந்து முறைப்படி சில பூஜைகளை செய்துள்ளார். இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.