1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 23 அக்டோபர் 2020 (08:09 IST)

பட்டிமன்றத்தில் கூட பேசவில்லையா? என்ன செய்கிறார்கள் ஆஜித், ஷிவானி?

பட்டிமன்றத்தில் கூட பேசவில்லையா?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று பட்டிமன்றம் டாஸ்க் கொடுக்கப்பட்டது என்பதும் இந்த டாஸ்கில் ரியோ, பாலாஜி, சோம்சேகர், சனம், சுரேஷ், அறந்தாங்கி நிஷா, அனிதா, ரம்யா உள்ளிட்டோர் காரசாரமாக தங்களது அணிக்காக பேசினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இறுதியில் நடுவரான அர்ச்சனா பிக்பாஸ் வீடு ஒரு ஆனந்த குடும்பம் என்று தீர்ப்பு அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆஜித், ஷிவானி உள்ளிட்டோர் பேசியதையே நேற்று நிகழ்ச்சியின்போது ஒளிபரப்பவில்லை. இவர்கள் உண்மையிலேயே பட்டிமன்றத்தில் பேசவே இல்லையா? அல்லது சுவராசியமாக பேசாததால் இவர்களுடைய பேச்சு எடிட்செய்யப்பட்டதா? என்பது தெரியாமல் பிக்பாஸ் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். இதுவரை ஆஜித், ஷிவானி ஆகிய இருவரும் அளவுக்கு மீறி மெளனம் காப்பது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
 
அதேபோல் நேற்றைய இன்னொரு டாஸ்க்கில் பாடகர் வேல்முருகன் பாடல் பாடினார். ஆனால் ஆஜித்தும் ஒரு நல்ல பாடகர் என்பதால் அவரையும் இந்த டாஸ்க்கில் பயன்படுத்தி இருக்கலாம் என்றும் அவருக்கு வாய்ப்பே கொடுக்காமல் அவர் பேசவில்லை என்று மட்டும் குற்றம் சாட்டுவது சரியல்ல என்றும் பிக்பாஸ் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்