புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 25 ஜூன் 2022 (09:39 IST)

“உன் பாதம் சேரும் வரை… வாழ்க்கை என்பதோர் கனவுதானே “ ஆன்மீக தளத்தில் AR ரஹ்மான்

இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர்,.ரஹ்மானின் மூத்த மகள் கதீஜாவுக்கும் இசைக் கலைஞர் ஷேக் முகமதுவுக்கும் கடந்த மே மாதம் 6 ஆம் தேதி திருமணம் நடந்த நிலையில், சமீபத்தில் இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி செங்கல்பட்டு மாவட்டடத்திலுள்ள ஏ.ஆர்.ரஹ்மான் பிலிம் சிட்டியில்  நடந்தது. இதில் பிரபலங்கள் கலந்துகொண்டனர். இதையடுத்து ரஹ்மான் விரைவில் அமெரிக்காவுக்கு இசைக்கச்சேரிக்காக செல்ல உள்ளார்.

அதற்கு முன்னாக ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர் தர்காவுக்கு சென்ற ரஹ்மான் தனது மனைவி சாய்ரா பானுவோடு வழிபாடு நடத்தியுள்ளார். அது சம்மந்தமான புகைப்படத்தை பகிர்ந்துள்ள ரஹ்மான் ஜோதா அக்பர் படத்தின் க்வாஜா எந்தன் க்வாஜா பாடலில் இடம்பெறும் வரிகளான “அஜ்மீர் தர்காவுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அடிக்கடி சென்று வருவது வழக்கம்.” என்ற் வரிகளையும் இணைத்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.