ஏ.ஆர். ரஹ்மான் முதல்முறையாக உருவாக்கிய இம்மர்ஸிவ் திரைப்படமான "Le Musk" இசை ஆல்பத்தை வெளியானது!
மிகுந்த எதிர்பார்ப்புடன் ரசிகர்களால் எதிர்நோக்கப்பட்ட இசையமைப்பாளர் மற்றும் ஆஸ்கர் விருதுபெற்ற இசை மாமேதை ஏ.ஆர். ரஹ்மான் தனது புதுமையான "Le Musk" படத்தின் புதிய இசை ஆல்பத்தை வெளியிட்டுள்ளார். .
12 ஆத்மார்த்தமான மற்றும் வேறுப்பட்ட இசைத் தொகுப்புகளுடன், உலகளாவிய அளவில் இன்று வெளியிடப்பட்ட இந்த இசை ஆல்பம், ரஹ்மானின் பிரபலமான படைப்புகளை போன்று ,எல்லைகளை தாண்டி , கேட்பவர்களை இசையால் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஹ்மான் தானே இயக்கியுள்ள "Le Musk" திரைப்படம், இசை, நறுமணம், மற்றும் காட்சி ,கதை அமைப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்து ஒரு புதிய வகை சினிமா அனுபவத்தை வழங்குகிறது.
இந்த பரிசோதனை அனுபவத்துடன்,
ரசிகர்களை இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இசை, ஜாஸ், ஆர்க்கெஸ்ட்ரா மற்றும் பல்வேறு இசைமுறைகளை இணைத்து செய்யும் ரஹ்மானின் தனித்துவமான பாணியை பிரதிபலிக்கிறது.
இந்த இசை ஆல்பம் குறித்து ஏ.ஆர். ரஹ்மான் கூறும்போது .....
இசை "Le Musk" படத்தின் இதயமாகும். அது படத்தின் உயிரை தாங்குகிறது, ரசிகர்களை உணர்ச்சிபூர்வமாகவும் அனுபவபூர்வமாகவும் வழிநடத்துகிறது. இந்த திரைப்படம் அதிக உழைப்பு மற்றும் அன்பின் பயனாக உருவானது. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒரு உணர்ச்சிகரமான அனுபவத்தை உருவாக்க முயன்றோம்.
இன்று உலகத்துடன் இந்த இசை ஆல்பத்தை பகிர்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறினார்