வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 21 மே 2022 (09:16 IST)

ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் மரணம்… ‘குரு’வுக்கு அஞ்சலி செலுத்திய ரஹ்மான்!

கிரீஸ் நாட்டை சேர்ந்த ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் மரண செய்தி உலகமெங்கும் உள்ள இசை ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது.

கிரீஸ் நாட்டில் பிறந்த வாங்கலஸ் திரைப்படங்கள், ஆவணப்படங்கள், குறும்படங்கள் மற்றும் செய்திப்படங்கள் என பலவகைப்பட்ட படைப்புகளுக்கு இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். அவர் இசையில் வெளியான  ‘சேரட்’ என்ற படத்துக்காக ஆஸ்கர் விருதையும் பெற்றுள்ளார். இந்நிலையில் பிரான்சில் உள்ள ஒரு மருத்துவமனையில் அவர் உயிரிழந்துள்ளார். அவரது மரணத்துக்கு கிரீஸ் நாட்டின் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வாங்கலஸ் மரணத்துக்கு அஞ்சலி தெரிவித்துள்ள இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் ‘நமது எலக்ட்ரானிக் இசைகுரு தற்போது நம்மோடு இல்லை. அவருக்கு அஞ்சலி” எனக் கூறி அவரோடு இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.