வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 1 மே 2023 (15:09 IST)

கச்சேரியில் சர்ச்சையானதால் பாதியில் நிறுத்தம்… வெளியேறிய ஏ ஆர் ரஹ்மான்!

தமிழ் சினிமாவின் பெருமைமிகு அடையாளங்களில் ஒருவரான ஏ ஆர் ரஹ்மான் இந்திய சினிமா தாண்டியும் ஹாலிவுட் படங்களுக்கும் இசையமைத்துள்ளார். ஆனால் தற்போது அதிக அளவில் தமிழ் படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது மாமன்னன் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து வரும் அவர், வரிசையாக வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இசைக் கச்சேரி நடத்தி வருகிறார்.

அந்த வகையில் நேற்று பூனேவில் அவரின் இசைக் கச்சேரி நடந்தது. இரவு 10 மணி வரை கச்சேரி நடத்த மட்டுமே அனுமதி வாங்கியதாக தெரிகிறது. ஆனால் அதை தாண்டியும் கச்சேரி நடந்ததால் போலீஸார் தரப்பில் மேடையேறி கச்சேரியை நிறுத்தக் கூறியுள்ளனர். இதனால் ஏ ஆர் ரஹ்மான் பாதியிலேயே மேடையின் பின்பக்கம் வழியாக வெளியேறினார். இது சம்மந்தமான வீடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.