செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 20 செப்டம்பர் 2017 (21:47 IST)

அஜித் ஓகே சொல்லனும்... ஏ.ஆர்.முருகதாஸ் வெய்ட்டிங்!!

அஜித் சம்மதம் தெரிவித்தால் நாளையே படபிடிப்பை துவங்க தயார் என ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.


 
 
நடிகர் அஜித் தற்போது தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக இருப்பதற்கு அவரது ரசிகர் பட்டாளமே சாட்சி. சமீபத்தில் சிவா இயக்கத்தில் அஜீத் நடித்த விவேகம் படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் வந்தாலும் ரசிகர்கள் அஜித்தின் உழைப்பை வெகுவாக பாராட்டியுள்ளனர்.
 
இந்நிலையில் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ், அஜீத்தை வைத்து இயக்க பல வருடங்களாக முயற்சி செய்து வருகிறார். ஆனால், அஜித் அதற்கு செவி சாய்க்கவில்லை. 
 
சமீபத்தில், ஏ.ஆர்.முருகதாஸ் அஜீத் சார் எப்போ ஓகே சொன்னாலும் அடுத்த நாளே படப்பிடிப்புக்கு தயாராக இருக்கிறேன். அவருக்கான கதையும் தயாராக உள்ளது என்று கூறியுள்ளார்.
 
தற்போது ஏ.ஆர். முருகதாஸ், ஸ்பைடர் படத்தை இயக்கியுள்ளார். அதனை அடுத்து நடிகர் விஜய்யை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.