1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வியாழன், 3 ஆகஸ்ட் 2023 (07:50 IST)

ஜெய்பீம் படக்குழுவினருக்கு எதிராக வழக்கு.. குறவர் சமூகத்தினரை இழிவுபடுத்தியதாக குற்றச்சாட்டு..!

சூர்யா நடித்த ஜெய் பீம் என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் இந்த படம் ஏற்கனவே ஒரு சில சர்ச்சைகளை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் தற்போது குறவர் சமூகத்தை இழிவுபடுத்தியதாக கூறி ஜெய் பீம் பட குழுவினருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. 
 
குறவர் நல்வாழ்வு சங்கத்தின் மாநில தலைவர் முருகேசன் என்பவர் இந்த வழக்கை தொடர்ந்து உள்ளார். தங்களது சமூகத்தை தவறாக சித்தரிக்கும் காட்சிகள் இந்த படத்தில் இருப்பதாகவும் இந்த படத்தில் நடித்த சூர்யா இயக்குனர் ஞானவேல் ஆகியோர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.  
 
ஏற்கனவே இந்த வழக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த போது தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தற்போது இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva