1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: சனி, 13 மே 2017 (06:26 IST)

கோலிவுட்டில் விஜய், பாலிவுட்டில் அமிதாப்: என்ன ஆச்சு இந்த ரசிகர்களுக்கு?

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இளையதளபதி விஜய் சிலைக்கு பூஜைகள், பிரார்த்தனை செய்த விஜய் ரசிகர்களுக்கு சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்தன. நடிகர்கள் பொதுமக்களை மகிழ்விக்கும் கலைஞர்கள் மட்டுமே. அவர்களை கடவுளுக்கு நிகராக வைப்பது பைத்தியக்காரத்தனம் என பலர் கருத்து தெரிவித்திருந்தனர்.



 


இந்த நிலையில் கோலிவுட்டில் விஜய்க்கு சிலை வைத்து வழிபாடு நடத்துவதை போல, பாலிவுட்டில் அமிதாப்பச்சனுக்கு அவரது ரசிகர்கள் சிலை வைத்து அதற்கு தீபாரதனை செய்து வழிபட்டுள்ளனர். இந்த சிலை குறித்து அமிதாப் ரசிகர் ஒருவர் கூறியபோது, 'தலைவர் அமிதாப்புக்காக உருவாக்கப்பட்ட கோயிலில் 25 கிலோ எடையுள்ள அவரின் சிலை நிறுவப்பட்டுள்ளது. ஃபைபரால் ஆன இந்தச் சிலை அமிதாப்பைவிட சற்று பெரிதாக இருக்கும். இந்தச் சிலைக்கு மெருகூட்டும் நோக்கில் அப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது' என்று கூறியுள்ளார்.

வட இந்தியாவில் அமிதாப்பை கடவுள் போல பார்க்கும் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்து கொண்டே வருவதாகவும், இப்படியே தனி மனித துதி மற்றும் நடிகர்களை கடவுளுக்கு நிகராக வழிபடுவது தொடர்ந்து கொண்டே செல்வது நல்லதற்கல்ல என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.