96 பட தலைப்பின் ரகசியத்தை உடைத்த விஜய் சேதுபதி

Sasikala| Last Updated: வெள்ளி, 16 ஜூன் 2017 (13:02 IST)
விஜய் சேதுபதி ஜோடியாக த்ரிஷா நடிக்க இருக்கும் புதிய படம் ‘96’. சி. பிரேம் குமார் என்பவர் இந்தப் படத்தின் மூலம்  இயக்குநராக அறிமுகம் ஆகிறார். கோவிந்த் மேனன் இந்தப் படத்துக்கு இசையமைத்திருக்கிறார்.

 
படத்தின் தலைப்பே வித்தியாசமாக உள்ளதே, என்ன அர்த்தம் என்று கேட்டால், படக்குழுவினர் மெளனம் காத்தனர். ஆனால்  விஜய் சேதுபதி தனது கதாபாத்திரம் குறித்து சொல்லும்போது டைட்டில் ரகசியத்தை உடைத்துவிட்டார்.
 
1996ஆம் ஆண்டு காலகட்டத்தில் நடப்பது போல் இந்தக் கதை அமைக்கப்பட்டுள்ளது. ட்ராவல் போட்டோகிராபராக இந்தப்  படத்தில் நடிக்கிறார் விஜய் சேதுபதி. 1996ஆம் ஆண்டு பள்ளிப்படிப்பை முடித்த ஒரே வகுப்பை சேர்ந்த மாணவர்கள் பற்றிய கதையாம். அத குறிக்கும் வகையில்தான் படத்திற்கு 96 என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாம்.
 


இதில் மேலும் படிக்கவும் :