வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: செவ்வாய், 4 ஜூலை 2017 (16:27 IST)

பிக் பாஸ் நிகழ்ச்சியின் நாட்கள் குறைகிறது…

100 நாட்கள் எனச் சொல்லப்பட்ட ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி, 70 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.


 

 
கடந்த ஒரு வாரமாக, எங்கு திரும்பினாலும் ‘பிக் பாஸ்’ பற்றிய பேச்சுத்தான். அந்த நிகழ்ச்சியைப் பற்றியும், அதில் கலந்து கொண்டவர்கள் பற்றியும் பேசாதவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். கமல் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி, விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகி வருகிறது. 15 பிரபலங்களை 30 கேமராக்கள் படம்பிடித்தன.

இந்த நிகழ்ச்சி, தெலுங்கிலும் விரைவில் தொடங்க இருக்கிறது. ஜூனியர் என்.டி.ஆர். தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில், 12 பிரபலங்கள் மட்டுமே கலந்து கொள்கின்றனர். ஆனால், 60 கேமராக்கள் அதில் கலந்து கொள்பவர்களைப் படம்பிடிக்க இருக்கின்றன. அத்துடன், 100 நாட்களாக இருந்தது, 70 நாட்களாக குறைக்கப்பட்டு, புதிய விதிமுறைகளுடன் அங்கு ஒளிபரப்பாக இருக்கிறது. ஜூலை 16ஆம் தேதி முதல் தெலுங்கு பிக் பாஸைக் காணலாம்.