1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: வெள்ளி, 5 ஜூன் 2015 (12:22 IST)

கத்திக்கு ஏழு ஃபிலிம்பேர் பரிந்துரைகள்

விவசாயத்தைப் பற்றி பேசும் பாவனையில் எடுக்கப்பட்ட கத்தி படம் ஃபிலிம்பேர் விருதுக்கு ஏழு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
 

 
இந்திய அளவில் தேசிய விருதுக்கு அடுத்தபடி கவனிக்கப்படுவது ஃபிலிம்பேர் விருது. முதலில் இந்திப் படங்களுக்கு மட்டும்தான் இந்த விருது வழங்கப்பட்டு வந்தது. இப்போது பிராந்திய மொழிப் படங்களுக்கும் விருதுகள் வழங்குகிறார்கள். 
 
2014 -க்கான விருதுக்கு தமிழ் படங்கள், கலைஞர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இதில் கத்தி சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குனர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த பாடலாசிரியர், சிறந்த பாடகர் என 7 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
 
சிறந்த நடிகை பரிந்துரையில் கத்தியில் நடித்த சமந்தா இருக்கிறார். நாராயணா... என்ன நடக்குது இங்க.