1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya
Last Updated : வியாழன், 7 ஜூலை 2016 (11:18 IST)

ஆறே மாதத்தில் 47 ஹீரோயின்கள்

தமிழ் சினிமாவில் இந்த வருடம் மட்டும் ஆறு மாதத்தில் 47 ஹிரோயின்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளனர்.


 

 
தமிழ் சினிமாவில் ஆண்டுதோறும் 50 முதல் 60 ஹீரோயின்கள் அறிமுகமாகிறார்கள். ஆனால் இம்முறை ஆறு மாதத்தில் 47 ஹீரோயின்கள், அதில் பத்துக்கும் குறைவானவர்களே இரண்டாவது படத்தில் நடிக்கிறார்கள் மற்றவர்கள் வாய்ப்பு கிடைக்காமல் விலகி இருக்கிறார்கள்.
 
ஜுன் மாதம் வரையில் வெளியான 105 தமிழ் படங்களில், 47 ஹீரோயின்கள் சிறு பட்ஜெட் படங்களில் அறிமுகமாகி இருக்கிறார்கள். அதில் பலர் மக்கள் கவனத்துக்கு வராமலே போய்விட்டனர்.
 
இந்த ஆண்டு இதுவரை அறிமுகமானவர்களில் ‘இறுதிச்சுற்று’ படத்தில் நடித்த ரித்திகா சிங், ‘காதலும் கடந்து போகும்’ மடோனா மற்றும் ‘வெற்றிவேல்’ படத்தில் நடித்த நிகிலா விமல் ஆகியோர் மட்டுமே அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகின்றனர்.
 
‘பிச்சைக்காரன்’ படத்தில் அறிமுகமான சத்னா டைட்டஸ், ‘மாலை நேரத்து மயக்கம்’ படத்தில் அறிமுகமான வாமிகா, ‘ஒரு நாள் கூத்து’ படத்தில் அறிமுகமான நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நன்றாக நடித்திருந்த போதும் அடுத்த வாய்ப்புகள்யின்றி இருக்கிறார்கள்.