ரஜினியின் லால் சலாம் படத்துக்கு போட்டியாக ரிலீஸாகும் மூன்று படங்கள்!
ரஜினிகாந்த் லைகா நிறுவனத்துக்கு லால் சலாம் மற்றும் ஞானவேல் இயக்கும் வேட்டையன் என இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதில் லால் சலாம் படத்தில் மொய்தீன் பாய் என்ற இஸ்லாமியர் வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்து இப்போது ரிலீஸ் பணிகள் நடந்து வருகின்றன.
இந்த படம் 2024 ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் பிப்ரவரி 9 ஆம் தேதிக்கு ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதே தேதியில் ஜெயம் ரவி நடிக்கும் சைரன், மணிகண்டன் நடிக்கும் லவ்வர் மற்றும் கவின் நடிக்கும் ஸ்டார் ஆகிய படங்கள் ரிலீஸ் ஆக உள்ளதாக சொல்லப்படுகிறது.