வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 22 ஆகஸ்ட் 2023 (18:11 IST)

'சந்திரமுகி 2' படத்தின் 2 வது சிங்கில் ரிலீஸ்

CHANDRAMUKI-2
ராகவா லாரன்ஸ்- ன் சந்திரமுகி 2 படத்தின்  2 வது சிங்கில் வெளியாகியுள்ளது.

ராகவா லாரன்ஸ் நடிப்பில் பி வாசு இயக்கத்தில்  உருவாகியுள்ள படம் சந்திரமுகி 2.  இப்படத்தில் ராகவா லாரன்ஸுடன் இணைந்து  வடிவேலு, ராதிகா சரத்குமார் மற்றும் கங்கனா ரனாவத் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ஆஸ்கர் விருது வென்ற மரகதமணி இசையமைத்துள்ளார்.

இப்படம்  விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 15 ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்த படத்தின் இசை வெளியீட்டு உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் முதல் சிங்கில் ஸ்வாகதாஞ்சலி கீரவாணியின் இசையில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

இதையடுத்து , நடிகர் வடிவேலு இப்படத்தின் டப்பிங் பணியில் ஈடுபட்டதாக  தெரிவித்து ஒரு கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டது படக்குழு..

இந்த நிலையில், சந்திரமுகி 2 படத்தின் 2 வது சிங்கில் பற்றிய அப்டேட்டை படக்குழு  நேற்று வெளியிட்டது. அதில்,   சந்திரமுகி2 பட 2 வது சிங்கில்  ‘Moruniye'  என்ற பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்தது.  அதன்படி, இன்று சோனிமியூசிக் சவுத் என்ற யூடியூப் பக்கத்தில் இப்பாடல் வெளியாகியுள்ளது.

கீரவாணி இசையில், விவேக் வரிகளில், எஸ்பி.சரண், ஹரிகா ஆகியோர் இப்பாடலை பாடியுள்ளனர். தோட்டா தரணி கலைஇயக்குனராகவும், ஆண்டனி எடிட்டராகவும் இப்படத்தில் பணியாற்றியுள்ளனர். ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ள இப்பாடல்   சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.