புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 13 நவம்பர் 2018 (20:20 IST)

தமிழ் ராக்கர்ஸ் பயமுறுத்தல் எதிரொலி: '2.0' படக்குழு எடுத்த அதிரடி முடிவு

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை புதிய திரைப்படங்கள் காலையில் தியேட்டரில் ரிலீஸானால் மதியம் அல்லது மாலையில் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியாகிவிடுகிறது. இந்த இணையதளத்தை கட்டுப்படுத்த திரையுலகினர்களும் காவல்துறையினர்களும் கடும் முயற்சி எடுத்து வந்தாலும் இவர்களின் கொட்டத்தை தடுக்க முடியவில்லை

இந்த நிலையில் ரஜினிகாந்த் நடித்த '2.0' திரைப்படத்தை ரிலீஸ் செய்ய வேலை நடந்து வருவதாக தமிழ் ராக்கர்ஸ் டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது. தங்களுக்கு எந்த சமூக வலைத்தளத்திலும் கணக்கு இல்லை என்று தமிழ் ராக்கர்ஸ் கூறினாலும் இதனை நம்ப யாரும் தயாராக இல்லை. நிச்சயம் '2.0' படத்தையும் ரிலீஸ் தினமே திருட்டுத்தனமாக இந்த இணையதளம் வெளியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் '2.0' படத்தை முதல் இரண்டு நாட்களுக்கு 3டியில் மட்டுமே வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இந்த படம்  தயாரிக்கும்போதே 3டியில் தயாரிக்கப்பட்டது என்பதால் திருட்டுத்தனமாக 3டி இல்லாமல் இணையதளத்தில் வெளியிட முடியாது. அப்படியே வெளியானாலும் தெளிவாக இருக்காது. இந்த அதிரடி முடிவு நல்ல முடிவுதான் என்றாலும், 3டி வசதி இல்லாத ஊர்களில் இந்த படம் வெளியாக வாய்ப்பு இல்லை என்பதால் ஓப்பனிங் வசூல் பெருமளவு பாதிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.