வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: சனி, 10 ஜூன் 2017 (07:47 IST)

ஜி.வி.பிரகாஷூக்கு 'திருமணம் என்னும் நிக்காஹ்' நாயகி

டோலிவுட்டில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற '100% லவ' திரைப்படம் தமிழில் ரீமேக் ஆக உள்ளதாகவும் அதில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கின்றார் என்பதும் தெரிந்தது.



 


இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷூக்கு ஜோடியாக பாலிவுட் நடிகைகள் ஷாரத கபூர் உள்பட பலர் பரிசீலிக்கப்பட்ட நிலையில் தற்போது ஹேபா பட்டேல் ஒப்பந்தமாகியுள்ளார். இவர் ஏற்கனவே கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த ஜெய் நடித்த 'திருமணம் என்னும் நிக்காஹ்' என்ற படத்தில் நடித்தவர்

தற்போது தெலுங்கில் பிசியாக இருக்கும் ஹேபா, ஜி.வி.பிரகாஷூடன் இணைகிறார். இந்த படத்தில் நாயகிக்கு நடிப்பதற்கு பல ஸ்கோப்கள் இருப்பதால் இந்த படத்திற்கு பின்னர் மீண்டும் கோலிவுட்டில் ஒரு ரவுண்ட் வருவேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தெலுங்கில் இந்த படத்தை இயக்கிய சுகுமார்  தயாரிக்கும் இந்த படத்தை அவருடைய உதவியாளர் சந்திரமெளலி இயக்கவுள்ளார்.