வரிவிலக்கு சலுகையை இழந்த யாமிருக்க பயமே
எல்ரெட் குமாரின் ஆர்.எஸ்.இன்ஃபோடெய்ன்மெண்ட் தயாரித்திருக்கும் யாமிருக்க பயமே படம் 30 சதவீத வரிவிலக்கு சலுகையை பெறும் தகுதியை இழந்தது.
யாமிருக்க பயமே படத்தை அறிமுக இயக்குனர் டிகே இயக்கியுள்ளார். கிருஷ்ணா ஹீரோ. ஹீரோயின் ரூப மஞ்சரி. இவர்களுடன் கருணாகரன், ஓவியா ஆகியோரும் நடித்துள்ளனர்.
காமெடி த்ரில்லர் வகையைச் சேர்ந்த இந்தப் படம் மே மாதம் திரைக்கு வருகிறது. அதனை முன்னிட்டு படம் சென்சாருக்கு திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்தவர்கள் யுஏ சான்றிதழ் தந்தனர்.
வரி விலக்கு பெற வேண்டும் என்றால் தமிழ் பெயருடன் யு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். யுஏ சான்றிதழ் கிடைத்ததால் 30 சதவீத வரிவிலக்கு பெறும் தகுதியை படம் இழந்துள்ளது.