1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 18 ஜூன் 2022 (14:46 IST)

விஜய் 66 படத்தில் முக்கிய வேடத்தில் பிரபல நடிகர்… ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!

விஜய் நடிக்கும் தளபதி 66 படத்தை இயக்குனர் வம்சி இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

விஜய் நடித்து வரும் தளபதி 66 படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது இன்று ஐதராபாத்தில் தொடங்கி உள்ளது. படத்தில் நடிக்கும் முக்கியக் கதாபாத்திரங்களுக்கான நடிகர் நடிகைகள் பற்றி onboard தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபு, பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெயசுதா ஆகியோர் நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. மேலும் ‘தளபதி 66’ படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் எனவும் அந்த போஸ்டர்களில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படம் ஒரு குடும்ப செண்ட்டிமெண்ட் ஆக்‌ஷன் படமாக உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் தலைப்பு வரும் ஜூன் 22 ஆம் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அதற்குள்ளாக இணையத்தில் ‘வாரிசு’ என்ற தலைப்பைதான் படக்குழு வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த தகவல் இப்போது இணையத்தில் வேகமாக விஜய் ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது.

இந்நிலையில் படத்தைப் பற்றி கூடுதலாக ஒரு சுவாரஸ்ய தகவல் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் சில நிமிடங்கள் தோன்றும் காட்சியில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபு நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. வம்சி மற்றும் விஜய் ஆகிய இருவருக்குமே மகேஷ் பாபு நெருங்கிய நண்பர் என்பதால் இந்த வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது.